அனைவருக்கும் அறிவியல்




எங்கிருந்து துவங்கறது??

பேசறதுக்கு என்ன இல்ல அறிவியல்ல,
பொதுவா எதப்பத்தி பேசுனாலும், எங்கிருந்து தொடங்கறதுன்னு ஒரு தயக்கம் இருக்கும், ஆனா அறிவியலைப் பொறுத்தவரை எங்கிருந்து வேண்டுமானாலும் துவங்கலாம், கண்ணுக்கு தெரியாததிலிருந்து கற்பனைக்கு எட்டாத அளவு வரை பயணம் செய்யலாம். அறிவியல்ல இருக்குற சுவாரஸ்யமான விடயமே இதுதான்.
ஆனாலும், அறிவியல்ல நோபல் பரிசுன்றது எல்லாரையும் கவர்ற ஒன்னு, அதுக்கும் மேல அறிவியல் துறைல குறிப்பிடத் தகுந்த நேர்மையோட இருக்கக்கூடிய விருதுமட்டுமில்லாம பொது மக்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒரு விருதாவும் இருக்கறதால அங்கிருந்தே ஆரம்பிக்கலாம். இந்த விருது குறித்த மேலதிக தகவல்கள் இவ்வலைப்பதிவின் இடப்பக்கத்திலுள்ள சில பயனுள்ள சுட்டிகளில் காணலாம்.
Justify Full
சரி முதல்ல நோபல் பரிசுன்னா என்ன?

நோபல் பரிசு ஒவ்வொரு ஆண்டும், குறிப்பிட்ட சில துறைகளில் (இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் உலக அமைதி) சிறந்த கண்டுபிடிப்புகளுக்காகவும், அத்துறைகளில், குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை அளித்தவர்களுக்கும் வழங்கப் படுகிறது. நோபல் பரிசு பற்றிய மேலதிகத் தகவல்கள், புள்ளிவிபரங்கள், அது தோன்றியவிதம் போன்ற தகவல்களை அறிந்து கொள்ள இதே வலைப்பதிவில் இடது பக்கத்திலுள்ள நோபல் பரிசுக்கான வலைப்பக்கத்தின் இணைப்பில் பார்க்கலாம்.

2008 ஆம் ஆண்டில் அறிவியல்ல யார், யாரு, எதுக்காக நோபல் பரிசு வாங்கினாங்க?

இயற்பியல்ல - அணுக்கருத் துகள்களில் நடக்குற "தன்னிச்சை சீர்மைச் சிதைவு(Spontaneous symmetry breaking)" அப்படின்ற நிகழ்வுக்கான வழிமுறையை முன்மொழிஞ்சதுக்காக 2008 ஆம் ஆண்டின் நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கு.

இந்தப் பரிசை மூன்று பேர் சேர்ந்து பகிர்ந்துகிறாங்க..

அதுல -
1. யோசிரோ நம்பு - Enrico Fermi Institute, University of Chicago
Chicago, IL, USA - நோபல் பரிசின் 1/2 சதவிகிதமும்
2.மகோடோ கோபயாஷி - High Energy Accelerator Research Organization (KEK)
Tsukuba, Japan - நோபல் பரிசின் 1/4 சதவிகிதமும்
3.டொஷிஹிடே மஸ்காவா - Kyoto Sangyo University; Yukawa Institute for Theoretical Physics (YITP), Kyoto University
Kyoto, Japan - நோபல் பரிசின் 1/4 சதவிகிதமும் பகிர்ந்துகிட்டாங்க.

வேதியல் - உயிரிகளின் நின்றொளிர்தல் (Bioluminescence) என்ற விளைவுக்கு காரணமான மரபணு பற்றிய கண்டுபிடுப்புக்காக வழங்கப்பட்டிருக்கு.


இயற்பியல்ல எதுக்காக நோபல் பரிசு குடுத்தாங்கன்னு விரிவா அடுத்த இடுகைல பாக்கலாம்.

4 comments:

  1. அனைவருக்கும் அறிவியல் on 10 November 2009 at 1:05 am

    சோதனைப் பின்னூட்டம்

     
  2. விஜே on 8 March 2010 at 8:47 pm

    அருமையான பதிவுகள். தொடர்ந்து எழுதுங்கள்.

    ஆனால் கொச்சை மொழிநடையைச் சிறிது குறைத்து கொண்டால், கட்டுரைகள் மேலும் சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது.

    அதே போல, குவாண்டம் போன்ற வார்த்தைகளைத் தமிழ்படுத்தாமல் அப்படியே பயன்படுத்துவதும் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    இரண்டாவதாக, பதிவு அ.5 குறித்து சில கேள்விகள்:

    1. எலக்ட்ரான்களுக்குள் குளூவான்களும், குவார்க்குகளும் இல்லையா?

    2. குளூவான்களுக்கும், குவார்க்குகளுக்கும் நிறை உண்டா?

    மற்றபடி பதிவு சூப்பர். தொடருங்கள்.

    நன்றி

     
  3. விஜே on 8 March 2010 at 8:50 pm

    Field Theory குறித்தும், குவாண்டம் புலக்கோட்பாடு குறித்தும் கூட எழுதுங்களேன்.

     
  4. அனைவருக்கும் அறிவியல் on 12 March 2010 at 1:29 am

    நன்றிங்க வி.ஜே..

    பேச்சு வழக்கில் இருந்தால் வாசிக்க எளிதாக இருக்கும் என்ற எண்ணத்தில் அப்படி எழுதினேன். இனி சிறிது மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறேன்.

    குவாண்டம் - என்பதை அடைப்புக்குறிகளுள் கொடுக்கிறேன்.

    //எலக்ட்ரான்களுக்குள் குளூவான்களும், குவார்க்குகளும் இல்லையா?//

    இல்லை எலக்ட்ரான்கள் இதுவரை சிதைக்கப்பட்டு அதன் உள்கட்டமைப்புகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

    //2. குளூவான்களுக்கும், குவார்க்குகளுக்கும் நிறை உண்டா?//

    2. குவார்க்குகளுக்கு நிறை உண்டு, குளுவான்களுக்கும் நிறை உண்டு. ஆனால், அவற்றின் நிறையை குவாண்டம் புலக்கொள்கையின் உதவியினூடே புரிந்து கொள்ள முடியும்.

    //Field Theory குறித்தும், குவாண்டம் புலக்கோட்பாடு குறித்தும் கூட எழுதுங்களேன்.//

    இனி வரும் இடுகைகளில் படிப்படியாக அந்தப் புள்ளிக்கு வரலாம் என்றிருக்கிறேன். ஆனாலும் அது சவாலான ஒரு பகுதியாக இருக்கப் போகிறது என்பதில் அய்யமில்லை.

    ஊக்கத்திற்கு நன்றி..

     


என்னைப்பற்றி

அடிப்படை அறிவியல் - அடிப்படை அறிவியல் பத்தி பொழுதுபோக்கா உரையாடுவதற்கான வலைப்பதிவு. ~~~~~~~~~~~~~~~ தொடர்புக்கு - ariviyal@gmail.com

அறிவுப்பு

இவ்வலைப்பதிவில் உள்ள வரைபடங்கள், புகைப்படங்கள் மற்றும்கட்டுரைகளுக்கு முன் அனுமதியற்ற பொருளீட்டும் நோக்குடனான பயன்பாடு மறுக்கப்படுகிறது.
~~~~~~~~~~~~~~~~~
மாணவர்களின் கல்விக்காகவும், விக்கிபீடியா போன்ற தளங்களுக்காகவும் இவ்வலைப்பதிவில் உள்ளவற்றை இலவசமாகப் பயன்படுத்திக்
கொள்ளலாம்.